அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ., தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளப் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையமும் அதனை உறுதி செய்துள்ளது.

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை நகர்வைக் காட்டும் படம்…