வாட்ஸ்-அப் குரூப் அட்மினாக இருந்தால் இந்த சித்து வேலைகள் தெரிந்திருக்க வேண்டுமே?
பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூகத் தளமான வாட்ஸ்-அப் பல புதிய வசதிகளைக் கொண்டு வரும் வகையில் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.
வாட்ஸ்-அப் கொண்டு வரவிருக்கும் புதிய வசதிகள் மூலம், வாட்ஸ்-அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கப் போகிறது.
அதாவது, ஒரு குரூப்பில் இருக்கும் ஒரு அல்லது ஒரு சில நபர்கள், அந்த குரூப்பில் எந்த தகவலையோ, புகைப்படத்தையோ, விடியோ அல்லது ஜிஃப் பைல்களையோ பகிர்ந்து கொள்ள முடியாத வகையில் தடை செய்ய இயலும். அப்படி ஒருவர் அல்லது பலர் தடை செய்யப்பட்டால், அவர்கள் அந்த குரூப்பில் வரும் தகவல்களைப் படிக்க மட்டும் முடியும்.
எந்த விஷயத்தையும் பதிவு செய்யவோ பதிலளிக்கவோ முடியாது. இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், பல குரூப் அட்மின்கள் நிம்மதியாக உறங்கலாம்.



