
மதுரை, டிச.12: இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .மதுரை மாவட்டத்தில் நாளை 13 12 20 ஞாயிற்றுக்கிழமை இரண்டாம்நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது .
இந்த தேர்வு காலை பதினோரு மணிக்கு தொடங்கி 12 இருபதுக்கு நிறைவு பெறுகிறது .மதுரை மாவட்டம் மற்றும் மாநகரில் 42 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது
இதில் மொத்தம் 37550பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 31 ஆயிரத்து 760 பேர் ஆண்கள் 5790 பேர் பெண்கள் ஆவார்கள். தற்போதுகொரோனா நோய் பரவல் இருப்பதால் அதை தடுக்கும் நடவடிக்கையாக தேர்வு எழுத வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.
தேர்வுக்கு வருபவர்களிடம் ஹால்டிக்கெட் மற்றும் எழுதுபொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் .மற்ற பொருட்களான அலைபேசி கைப்பை புத்தகம் போன்ற தேவையில்லாத பொருள்களை தேர்வு மையத்திற்கு கொண்டு வர அனுமதி இல்லை என்று தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.