என்னை வாழ வைக்கும் தெய்வங்களுக்கு… ரஜினி நெகிழ்ச்சி டிவிட்…

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

rajini

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் ‘இன்று எனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.