
இந்து முன்னணி அமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் விளாத்திகுளம் ஸ்ரீராம் அலுவலகம் மாடியில் வைத்து ஒன்றிய தலைவர் S.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் S.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
தீர்மானம் 1:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு நடைபெற உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளர் திருமதி தே.ஜோதி.
இவர் சமீபத்தில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிர நக்சலைட் வேல்முருகனின் தீவிர ஆதரவாளர். திருமதி ஜோதி அவர்களும் நக்சலைட் உடன் தொடர்பு உடையவர். இவரது கருத்துக்கள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஆதரித்தும் தேசத்திற்கு எதிராகவும் உள்ளது. சி.எஸ்.ஐ. டயோசீசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு எஸ்டிபிஐ முபாரக், விடுதலை சிறுத்தை கட்சி ஆளூர் ஷாநவாஸ், முஸ்லிம் லீக் நவாஸ் கனி, வேல்முருகன், சுபவீரபாண்டியன், உட்பட இதன் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்கிறார். நிறைவுரையாக மு க ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சியாக உரையாற்றுகிறார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரான திரு மு க ஸ்டாலின் அவர்கள் இந்தக் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திமுக கட்சி தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அனுமதிக்கக்கூடாது என்று இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு தமிழக காவல்துறையும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் வணிக வளாகம் என்ற பெயரில் நகராட்சி அனுமதி பெற்று வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் சத்திய முழக்கம் அசம்பிளி ஆப் சர்ச் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மத வழிபாடு என்ற போர்வையில் இந்து மதத்தை கொச்சை படுத்தி பேசுகின்றனர்.
சுயமாக சிந்திக்கத் தெரியாத சிறு குழந்தைகளை அழைத்து அவர்களிடம் இந்து கடவுள்களை சாத்தான் என்றும் இயேசு தான் உண்மையான கடவுள் என்றும் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கோவில்பட்டி நகர இந்து முன்னணி 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு முறையாக அனுமதி இல்லாமல் மதப்பிரச்சாரம் செய்யும் இடத்தில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனால் 10/10/2020 சனிக்கிழமை அன்று மாலை திருமதி விஜயா கோட்டாட்சியர் அவர்கள் அழைப்பானை கொடுத்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத காரணத்தினால் 14/10/2020 புதன் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதுநாள் வரை கோட்டாட்சியர் அவர்கள் எங்களை அழைத்துப் பேசவில்லை. நாங்கள் சந்தேகப்பட்டு திருமதி விஜயா அவர்கள் எந்த மதம் என்று பார்த்ததில் அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. ஆகையால் திருமதி விஜயா அவர்கள் மத ரீதியில் செயல்படுகிறார் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக கவனம் செலுத்தி முறையாக அனுமதி இல்லாமல் செயல்படும் சர்ச்சை தடைசெய்ய இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.