
கார் அனுப்புகிறேன்… வந்து ஒருவேளை தங்கி சாப்பிட்டு செல்ல வேண்டும்… கேசிஆரிடமிருந்து ஆந்திரா விவசாயிக்கு அழைப்பு.
தெலங்காணா முதல்வரின் பார்வையை ஈர்த்த ஆந்திராவின் ஆதர்ச விவசாயி. போன்செய்து போஜனத்திற்கு அழைத்த தெலங்காணா முதல்வர்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு தெலங்காணா முதல்வர் சந்திரசேகர ராவு போன் செய்து பாராட்டி விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த விவசாயியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தெலங்காணா முதல்வர் கேசிஆர் தனக்கு சனிக்கிழமை போன் செய்து தன்னோடு பேசினார் என்று அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணா மாவட்டம் கண்டசாலா மண்டலம் கண்டசாலபாலெம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதர்ச விவசாயி உப்பல பிரசாத்ராவுக்கு சனிக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு தெலங்காணா முதல்வர் கேசிஆரிடம் இருந்து போன் வந்தது.
ஸீடிரில் என்ற நவீன இயந்திரத்தை உபயோகித்து நேரடியாக நிலத்தில் விதை விதைக்கும் முறை குறித்து விவசாயி பிரசாத்ராவிடம் கேட்டு விவரங்கள் அறிந்து கொண்டார் தெலங்காணா முதல்வர்.
தன்னுடைய 35 ஏக்கர் நிலத்தில் சீடிரில் எந்திரம் மூலம் ‘வெத முறை’ என்று கூறப்படும் நேரடியாக விதைகளை நாட்டும் முறைப்படி சன்ன ரகம் நெல் சாகுபடி செய்ததாகவும் ஒரு ஏக்கருக்கு 40 லிருந்து 45 மூட்டை மகசூல் சாதித்ததாகவும் பிரசாத்ராவு தெரிவித்தார்.
இதுகுறித்து கேட்டு அறிந்து கொண்ட தெலங்காணா முதல்வர், தெலங்காணாவுக்கு வரவேண்டும் என்று அழைத்து தெலங்காணாவில் உள்ள விவசாய நடைமுறைகளை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
விரைவில் கார் அனுப்புவதாகவும் தெலங்காணாவின் விவசாய நடைமுறையை பரிசீலிக்க வேண்டும் என்றும் ஒருவேளை தங்கி போஜனம் செய்து செல்ல வேண்டுமென்றும் பிரசாத ராவுக்கு கேசிஆர் அழைப்பு விடுத்துள்ளார்.
கேசிஆரிடமிருந்து போன் வந்ததால் பிரசாத்ராவை பல விவசாயிகள் பாராட்டி வருகிறார்கள்.
பல கடினமான நிலைகளை தாண்டி வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி உள்ளார் விவசாயி பிரசாத் ராவ். கடந்த 32 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் இவர் இரண்டு ஏக்கர் நிலமும் 2 எருதுகளுமாத விவசாயத்தை ஆரம்பித்தார். தற்போது 200 ஏக்கராக உயர்ந்துள்ளது. விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் நடத்திவருகிறார்.
1982ல் படித்து வரும்போதே விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். தந்தையின் அனுமதி பெற்று விவசாயத்தில் அடியெடுத்து வைத்த பிரசாத ராவ் மிகவும் சிரமப்பட்டு வெற்றி அடைந்துள்ளார்.
ஆர்கானிக் முறையில் புல் வளர்த்து கால்நடைகளுக்கு போடுவதால் நல்ல பால் உற்பத்தியும் வருவதாக கூறுகிறார்.
சுவாமி விவேகானந்தர் தன்னுடைய ஆதர்சம் என்று கூறும் இவர் பல சிரமங்களை எதிர்கொண்டு முன்னேறியுள்ளார்.