
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையான தலமாகப் போற்றப் படும் திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், இன்று காலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
திருச்சி, திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, கடந்த 14ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பகல்பத்து உத்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். நம்பெருமாளின் நாச்சியார் திருக்கோலமான மோகினி அலங்கார சேவை சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப் படுகிறது.

தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசித் திருநாளான இன்று அதிகாலை 3:30க்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், அதிகாலை 4:55க்கு பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் கடந்தார்.

இராப்பத்து..முதலாம் திருநாள் 25.12.2020 காலை ரத்தின அங்கியில் …
முன்னதாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையைக் காரணம் காட்டி, நேற்று மாலை 6 மணி முதலே தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க காவல் துறையினர் மறுத்தனர். இதனால் இன்று காலை பரமபத வாசல் திறப்புக்கு பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது.

ஏகாதசி நாள் ஆயிரம் கால் மண்டபத்தில் இராப்பத்து.. முதலாம் திருநாள் 25.12.2020 காலை ரத்தின அங்கியில் …
நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து செல்லும் போது, அவர் பின் தொடர்ந்து செல்வதை வாழ்வின் பாக்கியமாக பக்தர்கள் கருதுவர். இருப்பினும், ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய பின் இன்று காலை 8 மணி முதல் பக்தர்கள், பரமபத வாசல் வழியாக செல்வதற்கும், நம்பெருமாளை தரிசிப்பதற்கும் அனுமதிக்கப் படுகின்றனர்.
ரங்கனாதமனிசம் ‐ வந்தஸ்ரீ
நாரத*ததி முனிகண வந்த்யமான சோபனீயமதி ஸூந்தர முகார விந்த (ர)
மங்கள கர நிஷ்களங்க தக்ஷிண
மந்தாகினி காவேரி மத்யஸ்தம்
சங்க சக்ர கதா பத்ம தர ஹஸ்தம்
ஸரஸிஜ விகஸித தளவர நேத்ரம் ஜலத கர மரகத வர்ண காத்ரம்
ஜனன மரண பய சமன பவித்ரம் ஜலஜஸம்பவ ஸன்னுத சரித்ரம் (ர)
லாவண்ய பத ஸேரோருஹம் ‐ ஸ்ரீ
ராஜேயாக தர்சன ஸந்தோஹம்
பாவ மதுர ஸரஸம் ப்ராவஹம்
பக்தோ*ஸவ பரமானந்த தேஹம்
ஸேவித நிஜஜன வரவிகோஷணம் ஸ்ரீகர ரசித ருசிர விபுஷணம்
ஸௌவித விஹங்க போகி பாஷணம் ஸன்னுத லங்காதிப விபீஷணம் (ர)