December 5, 2025, 11:06 PM
26.6 C
Chennai

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு தீர்ப்பு விபரம்

திருப்பூர் : நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு
தண்டனை விதித்துள்ளார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு 2 மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக 8 பேரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கெளசல்யாவின் உறவினர்கள் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 8 பேரும் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தண்டனை குறித்து கருத்து கேட்ட நீதிபதி

தண்டனை குறித்து குற்றவாளிகளிடம் நீதிபதி கருத்து கேட்டு வருகிறார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது என அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பிறகு தண்டனையை குறைத்து வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார்.

முன்னதாக திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி சாய்த்து தப்பித்து சென்றது. இந்த வீடியோ காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சங்கர் உயிரிழந்து விட்ட நிலையில், படுக்காயங்களோடு கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் அமைந்திருக்கும் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. .

இந்த வழக்கு தொடர்பாக கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கெளசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் போலீசார் கைது செய்தனர். சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், ஏற்னவே இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. கவுசல்யா தந்தை உட்பட6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

A1 சின்னசாமி (அப்பா )
தூக்கு தண்டனை

A2 அன்னலட்சுமி ( அம்மா ) விடுதலை

A3 பாண்டித்துரை( தாய் மாமா) விடுதலை

A4 ஜெகதீசன்
தூக்கு தண்டனை
1.30 லட்சம் அபராதம்

A5 மணிகண்டன்
தூக்கு தண்டனை

A6 செல்வக்குமார் தூக்குதண்டனை

A7 கலை தமிழ்வாணன்
தூக்குதண்டனை

A8 மதன் (எ) மைக்கேல்
தூக்கு தண்டனை

A9 ஸ்டீபன் தன்ராஜ்
இரட்டை ஆயுள் தண்டனை

A10 பிரசன்னா
விடுதலை

A11 மணிகண்டன்
5 ஆண்டு சிறை

தீர்ப்பு விதித்து அலமேலு நடராஜன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories