ஜெயலலிதாவின் உடல்நிலை நிலவரம் குறித்து அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரித்து தகவல் பெற விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது. முதலில் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ந்தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். அதற்கு அடுத்த நாள் அதாவது 21-ந்தேதி ராம மோகனராவ் ஆஜராக உள்ளார்.
இதற்கிடையே விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து விசாரணை ஆணையத்தின் கால அளவை நீட்டிக்க கோரிக்கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.



