
இந்துக்களின் கோரிக்கையை வலியுறுத்தி இறைவன் முன் வேண்டுதல் நிகழ்ச்சியை நடத்துகிறது இந்து முன்னணி அமைப்பு.
சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் முன், இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து இன்று (26 ஆம் தேதி) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற இருக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கோரிக்கை 1: ஒவ்வொரு ஆண்டும் சுவாமி வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இந்தாண்டு கொரானாவை காரணம் காட்டி, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இதுவரையில் எந்த ஏற்பாடும் செய்யாமல் உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மற்ற மதங்களின் வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை, அரசியல் கட்சிகளின் பொதுகூட்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அரசு தளர்வுகள் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே, இந்த ஆண்டு வழக்கம் போல சுவாமி புறப்பாடு நடத்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்க இந்து சமய அறநிலையத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை 2 : பெருமாள் கோவில்களில் தரும் துளசி தீர்த்தம் என்பது நோய் தீர்க்கும் மருந்து. இது சமய நம்பிக்கையும் ஆகும். ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படாமல் உள்ளது. உடனே பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோரிக்கை 3: மார்கழி மாதம் எனும் தனுர் மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வது விசேஷம். ஆனால், இந்து சமய அறநிலைத்துறை கோவிலின் உள்ளே கம்பிகளை அமைத்து, சுவாமி தரிசனம் செய்ய விடாமல், கோவிலை சுற்றி வர விடாமல் தடுக்கின்றனர்.
கோவிலின் உள்ளே போடப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளை அகற்றி பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புடன் சுவாமியை சுற்றி வர அனுமதி அளிக்க வேண்டும்.