
தமிழறிஞர் தொ. பரமசிவம் உடல் நலம் இல்லாமல்
23.12.2020 நாளன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்தார் என்பது தமிழ் ஆய்வு உலகின் இழப்பு.
அவருக்கு முதல் அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், ஆசிரியர் கி. வீரமணி, நடிகர் கமலஹாசன், தோழர் நல்லக்கண்ணு, வை. கோ. சீமான்( மாணவர்) முதலிய பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது தமிழுக்கும், தமிழர்களுக்கும் செயத மரியாதையாக் கருதுகிறேன். அத்துடன் திருநெல்வலி மாவட்ட ஆட்சியர், அமைச்சருடம் அரசு மரியாதை செய்த தமிழக அரசுக்கும் என் பாராட்டுக்கள்.
இந்தியா அரசு இந்திய மொழி எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் வாழும் காலத்தில பராமரிக்க வேண்டும்; காரணம் அவர்கள தான் ஒரு நாட்டின் அறிவுச் சொத்து. அவர்களின் எழுத்துகள் காலம் கடந்தும் பேசப்படும் பண்பாட்டின் சமூக வாழ்வின் அடையாளங்கள்.
பேராசிரியர் தொ. ப காரைக்குடியில் படித்த முன்னாள் மாணவர், இளையான்குடி, தியாகரசர் கல்லூரிகளில் பணியாற்றிய
பின் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவாரகப் பணிநிறைவு பெற்றவர்.
அவர் ஓய்வுக்குப்பின்னும் ஓய்வின்றி ஆய்வுகளை இறுதி மூச்சு வரை செய்தவர். தமிழக ஆய்வு. வரலாற்றில் ஆராய்ச்சி இதழ் நடத்தி நாட்டார், பண்பாட்டியல், சமூகவியல் திறனாய்வை வளர்த்த நா. வானமாமலைக்குப் பின் அந்த ஆய்வைத் தொடர்ந்து தமிழின் தொன்மங்களை, பண்பாட்டுக்கூறுகளை ஆராய்ந்தவர்.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எழுத்து என்பது மக்களை மையமிட்டதாக இருக்கும். அதில் அரசு பற்றிய விமர்சனம் எல்லாக் காலத்திலும் இருக்கும். அதைச் அரசு சரியாகப் புரிந்து கொண்டு எழுத்தாளர்களை, ஆய்வாளர்களை வாழும் காலத்தில்
பாதுகாத்து வர வேண்டும்.
நம் தமிழ் மரபில் அதியமான் சாகா வரம் தரும் நெல்லிக்கனியை அதியமான் தான் உண்ணாமல் தமிழ் வளைக்கும் ஓளவையாருக்குத் தான் கொடுத்தான். ஒளைவையாரும் அரசனின் வரிக்கொடுமையை எதிர்த்துப் பாடினார். அதை உணர்ந்த அரசன் வரியை நிறுத்தி விட்டு ஒளவையாரைப் போற்றினான்.
தமிழக அரசு பேராசியர் தொ. பரமசிவம் அவர்களின் ஆய்வுநூல்களை நாட்டுடமையாக்கி அக்குடும்பத்துக்கு
உச்சமான நிதி கொடுத்து கெளரப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் உறவுடன்
பேராசிரியர் பெ. சுபாசு சந்திர போசு
முன்னாள் மாணவர்,
அழகப்பா கல்லூரி
26.12.2020