
சனீஸ்வரர் பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர ஹோமம் யாக பூஜைகள் சிறப்புடன் நடைபெற்றது.
சனீஸ்வரர் பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடில் அமைந்துள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வரர் பெயர்ச்சி ஹோமம், ஏகாதச ருத்ர ஹோம யாக பூஜைகள் ஆகியவை சிறப்புடன் நடைபெற்றன.
ஆலயத்தில் பிரதான தெய்வங்கள் திருக்கொள்ளிக்காடர் எனும் அக்னீஸ்வரர், தேவி மிருதுபாத நாயகி மற்றும் பொங்கு சனீஸ்வரர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.

சுற்று சந்நிதிகளில் உள்ள தெய்வங்கள் வினாயகப் பெருமான், பகவான் பிரும்மா, தக்ஷிணாமூர்த்தி, வள்ளி மற்றும் தெய்வானை தேவிகளுடன் முருகப் பெருமான், தேவி துர்க்கை, தேவி மஹாலக்ஷ்மி மற்றும் நவகிரகங்களுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவற்றுடன் அபிஷேகம், கலசாபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

பின்னர் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவில் நிர்வாகிகள் செயல் அலுவலர் ப.சுரேந்தர் புதுக்கோட்டை ஜோதிடர் டாக்டர் கே.வி.செல்வராஜ், ஜோதிடர் டாக்டர் வி .குமார் மற்றும் சுற்றுவட்டார பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தி மற்றும் படங்கள்: டீலக்ஸ் சேகர்
–