
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். மருத்துவமனையில் இரு நாட்கள் மருத்துவ கவனிப்பில் இருந்தவர், பின்னர் இன்று மதியத்துக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

ஹைதராபாத் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரின் ரத்த அழுத்தம் சீரடைந்த நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, ரஜினிகாந்த் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டும், மன அழுத்தமின்றி மிக எளிதான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக ரஜினிகாந்த் தாம் வரும் 30 ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதனை அடுத்து ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் உடல் நலம் தேறி இப்போது சென்னை வந்துள்ள அவர், மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி தனது அரசியல் பணிகளை மேற்கொள்ளக் கூடும் என்று கூறப் படுகிறது.
முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது உடல் நலம் குறித்து தொலைபேசி வாயிலாக ரஜினியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அது போல் திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்காணா மாநில ஆளுநர் தமிழசை செளந்தர்ராஜன், நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் ரஜினியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.