
ஆயிரம் கோவில் நகரம் என்று பெருமையோடு அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் நுணுக்கமான சிற்பக்கலையில் சிறந்து, உயர்ந்து வான்முட்டி நிற்கும் அளவுக்கு ஏராளமான கோபுரங்கள் உள்ளன இவற்றைப் பார்த்து வியக்காத மனிதர்களே இல்லை
இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு இவை நிலைத்து நிற்கும். ஆனால் தற்போது பாரம்பரியமும் வரலாறும் நிறைந்த இந்த அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் சாக்கடை கால்வாயில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டை ஈபி ஆபீஸ் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் இந்தத் தூண்கள் உள்ளன. இக்காட்சியைப் பார்க்கும் வரலாற்று ஆய்வாளர்கள் மிகுந்த மன வேதனை அடைகிறார்கள்
இந்து அறநிலையத்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#temple #TNGovt #heritage
- பிரசன்ன வேங்கடேஷ்