
வீட்டுக்காரரின் மனைவியின் புடவை அணிந்திருந்த பணிப் பெண். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ச்சி. குண்டூரில்
கையும் களவுமாக பிடிபட்டார்.
ஒரு பெண் தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் கட்டிக்கொண்டிருந்த புடவையை பார்த்து வீட்டுக்காரரின் மனைவிக்கு சந்தேகம் வந்தது. தன்னுடைய புடவையை கட்டிக் கொண்டுள்ளதும் நகைகளை பூட்டிக் கொண்டிருந்ததும் பார்த்து விசாரித்ததில் உண்மை வெளிவந்தது.
அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட்டில் பெரும் திருட்டு நடந்தது. பெரிய அளவில் தங்கமும் பணமும் காணாமல் போயின. வீட்டு ஓனர் புகார் செய்ததால் வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் எந்தவித தடயமும் கிடைக்காமல் திண்டாடினர்.
திடீரென்று ஒரு நாள் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தன் புடவையைக் கட்டி இருந்த பெண்ணைப் பார்த்து வீட்டு ஓனரின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். விஷயமறிந்த போலீசார் களத்தில் இறங்கி தம்முடைய ஸ்டைலில் விசாரித்ததில் பணிப்பெண்ணின் கள்ளத்தனம் வெளிப்பட்டது.
இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து குண்டூர் போலீசார் தெரிவித்தது…
தாடேபல்லி பட்டணத்திலுள்ள டோலஸ்நகர் ப்ரைம் கேலக்ஸி அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு பிளாட்டில் நவம்பர் 29ஆம் தேதி பெரிய திருட்டு நடந்தது. தங்க மாங்கல்யம், தங்க சங்கிலி, தங்க வளையல், பணம் கொள்ளை போயின. வீட்டு உரிமையாளர் கத்திஅமோத் தன் வீட்டில் திருட்டு நடந்த விஷயத்தை கவனித்து போலிஸாரிடம் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரணை செய்த போலீசாருக்கு ஒரு மாத காலம் ஆகியும் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
இதனிடையே, இந்த மாதம் 24 ஆம் தேதி ஒரு பெண்ணின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து அவரது மனைவிக்கு சந்தேகம் வந்தது. திருட்டுக்கு உள்ளான தன்னுடைய புடவையைக் கட்டிக் கொண்டு தன்னுடைய தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்து தன் கணவரிடம் தெரிவித்தார். அவர் போலீசாருக்கு தகவலைத் தெரிவித்தார். போலீசார் அந்தப் பெண்ணின் பெயர் சுனிதா என்று அடையாளம் கண்டு காவலில் எடுத்து தங்கள் ஸ்டைலில் விசாரிக்க உண்மை வெளிப்பட்டது.
சுனீதா இதற்கு முன் அதே அபார்ட்மெண்டில் பணிபுரிந்தவள். காலி பிளாட்டுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மேனேஜர் அவளிடம் சாவிகளைக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் கத்திஅமோத் வீட்டு டூப்ளிகேட் சாவியும் கூட அதில் இருந்ததால் அதை எடுத்துக்கொண்டு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளாள் சுனீதா.
பீரோவை உடைத்து தங்க நகைகள் பணம் புடைகளைக் கூட திருடியுள்ளார். ஆனால் யாருக்கும் தெரியாது என்று நினைத்து, அவற்றை அணிந்து கொண்டு வாட்ஸ் அப் ஸ்டேடஸில் போட்டதால் மாட்டிக் கொண்டு பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் தள்ளினர்.