
ஆந்திர பிரதேஷ் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜனவரியில் புத்தாண்டில் மோடி இந்த அவார்டை முதல்வர் ஜெகனுக்கு அளிக்க உள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவார்டு கொடுக்க உள்ளார். நியூ இயரின் போது இந்த அவார்டு கொடுக்க உள்ளார். வர்ச்சுவல் மீட்டிங் மூலம் சிஎம் ஜெகனுக்கு பிரதமர் மோடி அவார்டு அளிப்பார்.
பிரதமரின் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் ஆந்திரபிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனால் ஆந்திரா அரசாங்கத்திற்கு ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் மோடி இந்த அவார்டு கொடுப்பார்.
மோடி அரசாங்கம் எடுத்து வந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஏழை மற்றும் மத்தியதர மக்களுக்கு சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு எடுத்துவந்த அற்புதமான வரம். இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு கடன் மீது 2.67 லட்சம் ரூபாய்கள் உதவி கிடைக்கிறது.
இந்த உதவி வீட்டுக் கடன் மீது செலுத்தும் வட்டிக்கு சப்சிடி வடிவில் வருகிறது. இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து வீடு வாங்குபவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த திட்டம் மூலம் லட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளார்கள். 2020இல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு இருக்க வேண்டுமென்ற இலக்கோடு பிஎம் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) தொடங்கினார்கள்.

இதுவரை ஆந்திராவில் ஏழைகளுக்கு வீட்டு பட்டா பகிர்ந்து அளித்து வந்தது அரசாங்கம். கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஜெகன் அரசாங்கம் இந்த நிகழ்ச்சியை பெருமையோடு தொடங்கியது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டு பட்டாக்கள் பகிர்ந்து அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
மாநிலத்தில் மத பேதமின்றி பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தோம் என்று ஆந்திரா அரசு தெரிவிக்கிறது. மாநிலத்தில் 30.75 லட்சம் வீட்டு பட்டாக்களை பகிர்ந்து அளிப்பதற்காக 66 ஆயிரத்து 518 ஏக்கர் சேகரித்ததாகக் கூறியது