
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. மாணிக்கம் எம் எல் ஏ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவிலில் ஜனவரி 25ல் நடக்கவிருக்கும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணி செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் திருப்பணி குழுவினர் களால் கோவில் புதுப்பிக்கப்பட்டது
இக் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி25 ல் நடக்க உள்ளது முன்னதாக முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது இதுதொடர்பாக கோவிலில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருள் உள்ளிட்ட வர்ணம் பூசிய முகூர்த்தகாலிர்க்கு திருப்பணி குழு பதஞ்சலி சுப்பிரமணிய செட்டியார் மாணிக்கம் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், கோவில் அதிகாரிகள் இளமதி, இளஞ்செழியன் முன்னிலையில் அர்ச்சனை சிறப்பு பூஜைகள் நடத்தினர்
பின்னர் வேதம் முழங்க சாஸ்திரப்படி நெய் பால் ஊற்றி பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது
இவ்விழாவில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா பொதுக்குழு நாகராஜன் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டியன் பஞ்சவர்ணம் ராமலிங்கம் கார்த்திகா ஞானசேகரன் சிவகுமார் வக்கீல் தங்கபாண்டியன் கூட்டுறவு சங்க தலைவர்கள் மருதுசேது செழியன் ராமன் முனியாண்டி கார்த்திக் நிர்வாகிகள் கண்ணுச்சாமி சிலம்பு செல்வன் தண்டபாணி சேது திரவியம்வீரபத்ரன் முருகேசன் மாணவரணி சூர்யா கென்னடி கேபிள் மணி ச.சந்திரன் மாசாணம் ராமச்சந்திரன் மாவட்ட மகளிரணி தலைவி லட்சுமி, திருப்பணி குழுவினர் சின்ன பாண்டி, பாஸ்கர், மணி, தணிகாசலம், ராஜு, தனம் ஆசிரியை வாசகம் முருகன் ஆலய பணியாளர்கள் கவிதா கணசன் பூபதி வசந்த் அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.