
கடந்த 1986 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி மும்பையில் பிறந்த சானியா மிர்சா, டென்னிஸ் விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் கடந்த 2003 -ம் ஆண்டு மகளிர் டென்னிஸில் முன்னிலை விகித்தார். மேலும், இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என்ற பட்டமும் பெற்றார். இதனால், கடந்த 2004 -ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு, அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது.
பின்னர், 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேமிலி கோப்பை டென்னிசு போட்டியில் மார்ட்டினா கிஞ்சிசுடன் இணைத்து இரட்டையர் பட்டத்தை வென்றார்.
இதனால், இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார். டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதல் இடம் பிடிக்கும் முதல் இந்தியப் பெண் இவர். இப்படி பல்வேறு பெருமைகளை பெற்ற சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷோயிப் மாலிக்கை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் லாகூரில் இருந்து காரில் கிளம்பிய ஷோயிப் மாலிக், காரை வேகமாக செலுத்தியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிறுத்திவைக்கப்பட்ட லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயம் ஏதுமின்றி ஷோயிப் மாலிக் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.