
பனங்கிழங்கு லட்டு
தேவையான பொருட்கள்
பனங்கிழங்கு (அவித்தது). – 7,8
துருவிய தேங்காய். – 1/2 கப்
பனஞ்சர்க்கரை. – 4-5 தேக்கரண்டி
பொடித்த பருப்பு வகைகள் (பாதாம், முந்திரி..). – 1/4 கப்
நெய். – 2 மேசைக்கரண்டி
அவித்த பனங்கிழங்குகளை எடுத்து அவற்றின் தோலையும் நடுப்பகுதியில் இருக்கும் குச்சி போன்றவற்றையும் நீக்க வேண்டும்
பிறகு நார்களை உரித்தெடுக்க வேண்டும். இயன்றளவு நார்களை நீக்கிவிட வேண்டும்
பிறகு பனங்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
பனங்கிழங்கு துண்டுக்கள், தேங்காய் துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். மிகவும் பேஸ்ட் போல் வரக் கூடாது.
ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் பனஞ்சக்கரையும் பொடீத்த பருப்பு வகைகளையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
கையில் சிறிது நெய் தடவி அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். மேலே சிறிது பொடித்த பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்