
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம்.. தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினார்.
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது.
முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது.
மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது.
ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது.
ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் “பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது. முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும்.
தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. பிரதமரின் விடா முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது. அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது.
முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு உள்ளார்.
தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது” எனக் கூறினார்