
வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப்பிற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இது ஒரு பயனரின் கணக்கை தங்கள் கணினியுடன் இணைக்கும்போது மற்றொரு பாதுகாப்பைச் சேர்க்கும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப் இப்போது முகம் அல்லது கைரேகை பயன்படுத்தி அன்லாக் செய்துகொள்ளும். இது ஒரு பயனர் வெப் பதிப்போடு இணைக்கும்போது மொபைல் போன் இயக்க முறைமையில் கிடைக்கும்.
வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பை ஒருவரின் கணக்கில் இணைக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன்பு, தொலைபேசியில் முகம் அல்லது கைரேகை திறப்பைப் பயன்படுத்துமாறு கேட்கப்படுவார்கள் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை லேப்டாப் அல்லது பிசி-யுடன் இணைக்க தொலைபேசியிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய பாதுகாப்பு அம்சம், பயனருக்குத் தெரியாமல் தங்கள் வீட்டு வாட்ஸ்அப் கணக்கில் ‘ஒரு ஹவுஸ்மேட் அல்லது அலுவலக நண்பர் சாதனங்களை இணைக்கக்கூடிய வாய்ப்பை மட்டுப்படுத்தும்’ என்கிறது. பாப்-அப் அறிவிப்புடன் வெப் / டெஸ்க்டாப் உள்நுழைவு ஏற்படும் போதெல்லாம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிப்பு செல்லும். ஆனால், புதிய அம்சம் கூடுதல் பாதுகாப்பை சேர்க்கும். பயனர்கள் எப்போதும் எந்த நேரத்திலும் தங்கள் தொலைபேசியிலிருந்து பயன்பாட்டு இணைப்பைத் துண்டிக்கும் திறனை தற்போது கொண்டிருக்கிறது.
மேலும், ‘உங்கள் சாதனத்தில் முகம் மற்றும் கைரேகை அங்கீகாரம், தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் நடைபெறுகிறது. வடிவமைப்பால், உங்கள் சாதனத்தின் இயக்க முறைமையால் சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை வாட்ஸ்அப் அணுக முடியாது’ என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சம் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் வலைப்பக்கத்திற்குக் காட்சி மறுவடிவமைப்புடன், வரும் வாரங்களில் இணக்கமான சாதனங்களைக் கொண்ட பயனர்களுக்கு வெளிவரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வலைத் தளத்திற்கான வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பிலும் வாட்ஸ்அப் செயல்படுகிறது. மேலும், இந்த அம்சம் பீட்டா சோதனையில் காணப்பட்டாலும், இன்னும் அனைத்து பயனர்களுக்கும் வெளிவரவில்லை.
வாட்ஸ்அப்பைத் திறந்து செட்டிங்ஸ் அமைப்பிற்கு செல்லவும். வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப்பை ஒரு விருப்பமாகப் பார்ப்பீர்கள். அதனை க்ளிக் செய்யவும்.
QR குறியீட்டை ஏற்கெனவே வெப் பிரவுசர் அல்லது டெஸ்க்டாப்பில் இணைக்கவில்லை என்றால் அதனை ஸ்கேன் செய்ய இப்போது கேட்கும்.
உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் பிரவுசரில் web.whatsapp.com-ஐத் திறக்கவும். பேட்லாக் சின்னம் url-க்கு முன்னால் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
டெஸ்க்டாப் / லேப்டாப் பிரவுசரில் காட்டப்பட்டுள்ள QR குறியீட்டை வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் விருப்பத்துடன் பயன்பாட்டை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் வாட்ஸ்அப் இப்போது உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசரில் காண்பிக்கப்படும்.
உங்கள் தொலைபேசியில் உள்ள அமைப்புகளிலிருந்து எந்த சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாட்ஸ்அப் இணைக்கப்பட்டுள்ள அறிமுகமில்லாத சாதனத்தைக் கண்டால், ‘எல்லா சாதனங்களிலிருந்தும் வெளியேறு’ என்பதை க்ளிக் செய்யலாம்.