
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியில் சஞ்சு (29) என்பவர் வசித்து வருகிறார். இளைஞரான இவர் அண்மையில் செட்டிகுளம் பகுதியில் Z-3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் மூன்று பெண்கள் பணியில் சேர்ந்து வேலை புரிந்து வந்தனர். இந்த நிலையில் பெண்கள் கழிவறையில் கண்காணிப்பு கேமிரா இருந்துள்ளதை கண்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த பெண்கள் சஞ்சுவிடம் இது குறித்து கேட்டப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பெண்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சஞ்சுவை கைது செய்ததுடன் அவர் பொருத்திய சிசிடிவி கேமரா, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் தொடங்கிய நிறுவனத்தில் பெண்கள் வேலைக்கு சேர்ந்ததும் பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா அவரே பொருத்தியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.