பத்மவிபூஷண் விருது: எஸ்பிபியின் மனைவி, மகனுக்கு தமிழக பாஜக தலைவர் நேரில் வாழ்த்து!

சற்றுமுன் தமிழகம்
spb-wife-kushboo
spb-wife-kushboo

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு இருவரும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மனைவியை நேரில் சந்தித்தனர்.

கலை, இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.

spbs-house-1
spbs-house-1

இந்தியாவின் உயரிய விருதான இந்த விருது ஆண்டுதோறும் குடியரசு தின நாளில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு, 117 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

charan-bjp-murugan-1
charan-bjp-murugan-1

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மறைந்த பின்னணிபாடகர் S.P.பாலசுப்ரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்ததையொட்டி அவரின் மனைவி சாவித்திரி, மகன் S.P.B.சரண் ஆகியோர்களை நேரில் சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு உடன் இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.