Screenshot_2021-02-06-23-35-38-16

நாளை உதயநிதி ஸ்டாலின் கரூர் வருகை தரும் நிலையில் அதிமுகவினர் கரூர் நகர் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், கொடிகளை வேண்டும் என்றே கட்டியிருப்பதாகவும் அவற்றை அகற்ற வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணியினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

கரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வரும் பாதையில் டிஜிட்டல் பேனர்கள், கொடி கம்பங்கள் நட திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அதிமுகவினர் அந்தப் பகுதிகளில் டிஜிட்டல் பேனர்களும், அதிமுக கொடி கம்பங்களும் வைத்துள்ளனர். இதனை கண்டித்தும், அவற்றை அகற்றி தர வேண்டும் எனக் கூறி கரூர் மாவட்ட வழங்கறிஞர் அணி அமைப்பாளர் குடியரசு தலைமையிலான வழக்கறிஞர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதிமுகவினர் நாளை மஞ்சு விரட்டு நிகழ்ச்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடத்துகின்றனர். அதற்கு அவர்கள் அப்பகுதியில் டிஜிட்டல் பேனர், கொடிகள் வைக்காமல் நகர் முழுவதும் வைத்துள்ளனர். அவற்றை அகற்றி தர வேண்டும், தவறும்பட்சத்தில் அதிமுக தலைவர்கள் வரும் போது நாங்களும் இது போன்று வைக்க தயங்கமாட்டோம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட ஆளும் கட்சியினரே காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending