IRCTC: இனி பேருந்துகளுக்கும் முன்பதிவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
irctc
irctc

ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளமான IRCTC-இல் இதுவரை ரயில் மற்றும் விமான டிக்கெட் மட்டும் புக் செய்யும் வசதி இருந்த நிலையில், இனி பேருந்துகளும் புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC தளத்தை நாள்தோறும் ஏராளனமான மக்கள் பயன்படுத்துகின்றனர். IRCTC மொபைல் செயலியும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. IRCTC-இல் ரயில் மட்டும் இல்லாமல், விமான டிக்கெட்களையும் முன்பதிவு செய்ய முடியும்.

இந்நிலையில் அதில் பேருந்து முன்பதிவு வசதியும் சேர்ந்துள்ளது. அனைத்து டிக்கெட்டுகளையும் ஒரே தளத்தில் புக் செய்ய வசதியாக இந்த முறையை கொண்டு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

bus-booking
bus-booking

IRCTC மொபைல் செயலில் இந்த வசதி மார்ச் முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. மக்களின் வசதிக்காக IRCTC ஏற்கனவே 55,000 தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற முடியும். கேஷ்பேக் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் நியாயமான விலையில் முன்பதிவு செய்ய முடியும்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.