பேருந்தில் ஆண்கள் இங்குதான் அமர வேண்டும்: அரசு அதிரடி உத்தரவு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
bus
bus

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் மகளிர் இருக்கைகளில் அமர கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

பேருந்துகளில் ஆண்களும், பெண்களும் பயணம் செய்யும்போது பெண்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று தனித்தனி இருக்கைகள் இருக்கும்போது யாரும் அதை கடைபிடிப்பதில்லை.

அவரவர் இஷ்டத்திற்கு எந்த இருக்கைகளில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். சில சமயம் பேருந்துகளில் அதிக இட நெருக்கடி ஏற்படும்போது பெண்கள் பெரும்பாலான பிரச்சினைகளை ஆண்கள் மூலமாக சந்திக்கின்றனர்.

bus-travel-1
bus-travel-1

இந்நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் மகளிர் இருக்கைகளில் அமர கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை ஓட்டுநர்கள் நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. பெண்கள் நின்று கொண்டு பயணிக்கும் நிலையில் ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு இந்த புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.