kulab-kuruma-1
kulab-kuruma-1

குலோப் குருமா
தேவையான பொருட்கள்
குலோப் ஜாமூன் மிக்ஸ் – 100 கிராம்
முந்திரிபருப்பு-15
தேங்காய்துருவல்-1கப்
இஞ்சி,பூண்டுவிழுது-11/2டீஸ்பூன்
புதினாஇலைகள்-சிறிது
கொத்தமல்லிஇலைகள்-சிறிது
பெரியவெங்காயம்-2
சிறியவெங்காயம்-10
பச்சைமிளகாய்-7
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவையானஅளவு
தாளிக்க:-
சோம்பு-1/2டீஸ்பூன்
பட்டை-1சிறியதுண்டு
லவங்கம் -4

செய்முறை
முந்திரி பருப்பை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து விழுதாகஅரைக்கவும்.
தேங்காய் துருவலிருது இரண்டு தரமாக பால் எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சிறியவெங்காயம், புதினா இவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

குலோப் ஜாமூன் மிக்ஸ் ஸில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைத்து சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும்,சோம்பு,பட்டை, லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அரைத்த மசாலாவிழுது, உப்பு சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். தேங்காயில் இருந்து எடுத்த 2-வது பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்ததும் முந்திரிவிழுதை சேர்க்கவும். கெட்டியாகும் போது முதல் பாலை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும். பரிமாற சற்று நேரம்,முன்பு பொரித்த குலோப்பை குருமாவில் சேர்க்கவும்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending