பச்சை மலை முருகன் கோவில் புதிய கட்டிடம்! திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!

சற்றுமுன் தமிழகம்
patchamalai-murugan-temple-1
patchamalai-murugan-temple-1

பச்சமலை முருகன் கோவிலில், புது கட்டடங்களை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

கோபியில், பிரசித்தி பெற்ற பச்சமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும், 24ல் கும்பாபிஷேக விழா நடைப்பெறயுள்ளது. இதை முன்னிட்டு, கோவில் திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்து ரமணன், கோவிலில் தங்கத்தேர் செல்லும் பாதைக்கு, பாலம் அமைத்து விரிவாக்கம் செய்தும், அன்னதான மண்டபம் மற்றும் மடப்பள்ளி கட்டடங்களை அமைத்து கொடுத்தார்.

இவற்றை, அமைச்சர் செங்கோட்டையன், குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திருப்பணி குழு தலைவர் ஈஸ்வரன், திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்துரமணன், செயல் அலுவலர் சீனிவாசன், திருப்பணி குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.