தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலன் கருதியும் தொழி லாளர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொங்கல் பண்டிகை காலம் என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இதில் எவ்வித அரசியலுக்கும் இடம் கொடுக் காமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.
Popular Categories



