பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் டெங்கு காய்ச்சலுக்கு இவ்வளவு பேர் இறந்தனர் என்பது மத்தியக் குழுவினர் அளித்த அறிக்கையில் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி மற்ற அம்சங்களிலும் தமிழக சுகாதாரத்துறை தோல்வி அடைந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை தோல்விகளுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். மேலும் சுகாதாரத்துறையின் கடந்த 6 ஆண்டு செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
Popular Categories



