திருவண்ணாமலை செயின்ட் ஜோசப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராமகிருஷ்ணன் என்பவர் 6.1.18 அன்று ஆட்சியரின் முகாம் அலுவலகம் உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தபோது , குப்பைகள் இருந்ததை பார்த்து சுமார் 20 நிமிடம் அந்த சாலை முழுவதும் சுத்தம் செய்து, தூய்மை பணியில் தானாக முன்வந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த மாணவன் பற்றிய தகவல் அறிந்துக்கொண்டு பள்ளிக்கு நேரில் சென்று பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.
Popular Categories



