karur bus service - 2026

கரூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட 5 பனிமனைகளில் இருந்து 258 பேருந்துகள் 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது | மக்கள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் கரூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட 5 பனிமனைகளில் அதாவது டெப்போவில் இருந்து 100 % பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதால் அதாவது 100 சதவிகித பேருந்துகளும் இயங்குவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் தங்களது கல்வி நிறுவனங்கள் & பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் பொதுமக்களும் எந்த வித இன்னலும் இல்லாமல் தங்களது பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் போக்குவரத்து மண்டலத்தினை பொறுத்தவரை கரூர் கிளை 1, 67க்கு 67ம், கரூர் கிளை 2, 67க்கு 67ம், குளித்தலை, 41க்கு 41ம் ,அரவக்குறிச்சி, 29க்கு 29ம், முசிறி, 54க்கு 54ம் ஆகிய 5 டெப்போக்களில் 258 பேருந்துகள் 100 சதவிகிதம் பேருந்துகள் எந்த வித இடையூறுக்கள் இல்லாமல் ஓடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending