சட்டுபுட்டுனு செய்யுங்க.. பொட்டுக்கடலை டோக்ளா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Peanut Dokla - 2026

பொட்டுக்கடலை டோக்ளா
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – ஒரு கப்
கோதுமை ரவை – 3 தேக்கரண்டி
தயிர் – அரை கப்
ஈனோ சால்ட் – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு
வெள்ளை எள்
எண்ணெய்
கொத்தமல்லித் தழை

செய்முறை
பொட்டுக்கடலையை பொடித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கோதுமை ரவையை வெறும் சட்டியில் சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை பொடி, கோதுமை ரவை, தயிர், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

அதனுடன் எலுமிச்சை சாறை பிழிந்து கலக்கி விட்டு அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

பின்னர் இந்த கலவையுடன் ஈனோ சால்ட் கலந்து ஒரு தட்டில் ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.

தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து டோக்ளாவில் கொட்டி விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும். ஆரோக்கியமான பொட்டுக்கடலை டோக்ளா தயார். இதை இட்லி தட்டிலும் ஊற்றி வேக வைக்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.