மறைந்த முதல்அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் டி.டி.வி அணியினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு புறநகர் மாணவரணி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையேற்று இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் வார்டு உறுப்பினர் வெள்ளப்பாண்டி ,ஜெயராஜ்,சுப்புகுட்டி,அருளானந்தம் பலர் கலந்து கொண்டனர்.
