வழக்கறிஞர் வீட்டில் நகை பணம் கொள்ளை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
robbery
robbery

கோவையில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் மணிகண்டன் நகரை சேர்ந்தவர்கள் விஜயகுமார் – சாந்தா தம்பதியினர். இருவரும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றனர். விஜயகுமார் கடந்த சில நாட்களாக சபரிபாளையத்தில் புதிதாக வாங்கிய வீட்டில் தங்கியிருந்து, புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை மணிகண்டன் நகரில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் விஜயகுமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு 8 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயகுமார் அளித்த தகவலின் பேரில், குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருன்றனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.