தேர்தல் பறக்கும் படையால் 234 கிலோ தங்கம் பறிமுதல்!

சற்றுமுன் தமிழகம்
gold - 2026

தலைவாசலில் தேர்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையின்போது, 234 கிலோ தங்க நகைகள் மற்றும் லாரியை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் தேர்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனை ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சேலம் நகை கடைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் எடுத்துவரப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள 234 கிலோ நகைகளையும், லாரியையும் தேர்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனர்.

தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.