குடும்ப கட்சி: சிறுவயதிலேயே அரசியல் பயிற்சிக்கான வாய்ப்பு! உபிஸ் பெருமிதம்!

சற்றுமுன் தமிழகம்
chendur aadhavan - 2026

கருணாநிதி, 13 வயதிலேயே அரசியல் களத்தில் இறங்கியவர். அவரை போலவே அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என, குடும்பத்தினருக்கும் ஆர்வம் தொற்றியது.

இதே நிலை, பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுக்கும் உள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டம் கொஞ்சம் துாக்கலாக உள்ளது.

இங்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலரான, ஐ.பெரியசாமியின் குடும்பத்தில், தாத்தா முதல் பேரன்கள் வரை பிரசாரத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

ஆத்துாரில் போட்டியிடும், ஐ.பெரியசாமியை ஆதரித்து, அவரது மகள் இந்திரா ஆதரவு திரட்டி வருகிறார். அருகே உள்ள பழநி தொகுதியில், ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார், தி.மு.க., வேட்பாளராக உள்ளார். அவருக்காக, மனைவி அருள்மெர்சி, மகன் செந்துார் ஆதவன், மகள் ஓவியா மீனாட்சி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

Family party - 2026

சிறுவன் செந்துார் ஆதவன் கரைவேட்டி கட்டி, கட்சித் துண்டு அணிந்து, இளம் அரசியல்வாதியாகவே காட்சி அளிக்கிறார்.

இப்படி தாத்தா முதல் பேரன், பேத்தி வரை தீவிர அரசியலில் சுழன்று பணியாற்றுகின்றனர். இப்படி எல்லாம், சிறுவயதிலேயே அரசியல் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைப்பது அல்லது பெறுவது, நம்ம கட்சியில் தாம்பா நடக்கும்’ என்கின்றனர் உ.பி.,க்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.