இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப தொடர்பான ஒப்பந்தம்! அமெரிக்கா முடிவு!

us

இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்படுவது, போர் விமானத் தயாரிப்பில் உதவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையைச் சேர்ந்த, மார்க் வார்னர் மற்றும் ஜான் கார்னின், தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் திருத்தம் செய்யும், சில தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மார்க் வார்னர், சபையின் உளவுத் துறைக்கான நிலைக் குழு துணைத் தலைவராக உள்ளார்.

ஜான் கார்னின், குடியரசு கட்சியின் கொறடாவாக உள்ளார். மேலும், பார்லி.,யின் இந்திய விவகாரங்களுக்கான குழுவிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளனர். தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதற்காக, இவர்கள் தாக்கல் செய்துள்ள தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா – இஸ்ரேல் இடையே உள்ளது போல், இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இது குறித்து, ராணுவ அமைச்சர், மார்க் எஸ்பர் விளக்கம் அளிக்க வேண்டும்.ராணுவம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் மற்றும் தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, இரு நாடுகளுக்கு இடையே நிபுணர்களை பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்து, ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தியாவின் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். இந்தியா, தற்போது, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சுயமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தில், அமெரிக்கா உதவுவது குறித்து ஆராய வேண்டும்.

ராணுவ ஒத்துழைப்புக்கான, ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பில், இஸ்ரேல், நியூசிலாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளது போல், இந்தியாவையும் சேர்க்க வேண்டும்.அதன் மூலம், அமெரிக்காவின் உயர் ராணுவ தொழில்நுட்பங்கள், ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு செனட் உறுப்பினரான, ஜான் சுலிவான் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘இந்தியாவின் ராணுவ பலத்தை உயர்த்தும் வகையில், அதனுடன் அதிக அளவில் போர் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.’போர் விமானங்கள் தயாரிப்பது உள்ளிட்டவற்றில், அதிக ஒத்துழைப்பு தர வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.செனட் சபையைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான, கோரி கார்ட்னர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்க வேண்டும்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories