வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து முதியவர் மரணம்!

சற்றுமுன் தமிழகம்
arjun - 2026

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்ப்பட்ட அய்யம்பேட்டையில் தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த 62 வயது முதியவர் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு திரும்பும் போது மயக்க போட்டு கீழே விழுந்துள்ளார்.

அருகில் உள்ளவர்கள் அவரை உடனடியாக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இறந்த முதியவர் அர்ஜுனன் நெசவு கூலித் தொழிலாளி அவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகள் மகன் உள்ளனர்.

அர்ஜுனனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஏற்கனவே நெஞ்சுவலி இருப்பதாகவும் மேலும் லோபிரசர் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.