
தென்காசி மாவட்டத்தில் கள்ளகாதல் விவகாரத்தில் இரண்டாவது கணவரை கள்ளகாதலுடன் கொலை செய்து வீட்டின் தென்னை மரத்திற்கு அடியில் புதைத்த மனைவி, 3 வருடத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவில் அபி என்ற அபிராமி (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது முதல் கணவர் இறந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மெக்கானிக்கல் தொழில் செய்து வந்த 19 வயது இளைஞரான காளிராஜ் என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண்டாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மகனை கடந்த மூன்று வருடமாக காணவிலை என காளிராஜின் தாய் உமா தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் அடிப்படையில் அபிராமியை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். காளிராஜை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனக்கும் மாரிமுத்து என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஒரு நாள் காளிராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் அபியின் வீட்டுக்கு மாரிமுத்து வந்துள்ளார்.
அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை திடீரென வீட்டிற்கு வந்த காளிராஜ் பார்த்துவிட்டார். அப்போது காளிராஜுக்கும் மாரிமுத்துவுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் காளிராஜை மாரிமுத்து அடித்தே கொன்றுவிட்டார்.

பின்னர் மாரிமுத்துவின் நண்பர்கள் இருவர் உதவியுடன் வீட்டில் உள்ள தென்னை மரத்திற்கு அடியில் காளிராஜின் சடலத்தை புதைத்துள்ளதாக அபி கூறியுள்ளார்.
இதையடுத்து தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பால முருகன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது காளிராஜின் சடலம் எலும்பு கூடாக மீட்கப்பட்டது. இதையடுத்து அபிராமி, கள்ளகாதலன் மாரிமுத்து மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 4 நபர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் உள்ளே கணவரை புதைத்து மூன்று வருடத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.