
இயக்குன திரு சமீபத்தில் பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது.
நாம் நமது மிக முக்கியமான பொருளைத் தொலைத்துவிட்டு பதறி தேடும் போது அடையாளம் தெரியாத ஒருவர் அதைக் கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கும் போது இன்னும் மனிதம் மறித்துப் போகவில்லை என்று நெகிழ்ச்சியடைவோம். அப்படி ஒரு சம்பவம் தான் இயக்குனர் திருவுக்கு நடந்துள்ளது.
இயக்குனர் திரு தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், சந்திரமௌலி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். குக் வித் கோமாளில் கனியின் கணவரும் கூட. திரு சமீபத்தில் தனது பர்ஸைத் தொலைத்துவிட்டு ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதை பத்திரமாக அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு எதாவது கிடைச்சிருக்கா..? எனக்கு கெடச்சுது.. yes என்னோட wallet, இரண்டு வாரங்கள் கழித்து. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி திரு. மோகன் !’ என்று தெரிவித்துள்ளார். திருவின் இந்தப் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு எதாவது கிடைச்சிருக்கா..? எனக்கு கெடச்சுது.. yes என்னோட wallet, After 2 weeks.. காதல்கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்😍
— Thiru (@dir_thiru) April 26, 2021
Thank you Mr G.Mohan #Humanity #மனிதம் pic.twitter.com/3XUrbod0ZJ