கொரோனா: திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்!

Published:

muthukumaran
muthukumaran

யாக்கை திரைப்படத்தின் தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழந்து வருகின்றனர்.

இயக்குநர் தாமிரா உயிரிழந்தார். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா, சுவாதி ரெட்டி நடித்த திரைப்படம் யாக்கை.

இந்தப் படத்தை தயாரித்தவர் முத்துக்குமரன். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததால் அவர் இயற்கை எய்தினார்.

அவர் இறந்த தகவலை நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது நெருங்கிய நண்பரையும், யாக்கை படத்தின் தயாரிப்பாளரையும் இழந்துவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img