December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

அனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்!

Fig Fruit
Fig Fruit

பல விதமான உடல் நோய்கள் பாதிப்புகளை நீக்கும் ஒரு பழமாக “அத்திப்பழம்” இருக்கிறது. இந்த அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் பதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். அந்த அத்திப்பழத்தினால் கிடைக்கும்.

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.

அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.

பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.

எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். ஆசனவாய் எரிச்சல், ரத்தக்கசிவு, மூலம் போன்ற பிரச்னைகளையும் அத்தி தீர்க்கிறது. உடலில் அளவோடு ரத்தம் உற்பத்தியாகிறது, ரத்த சோகை நீங்குகிறது.

நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது. அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.

அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பெண்களுக்கு வெள்ளைப் படுதலைப்போக்கவும் அத்திப்பழம் பயன்படுகிறது.

ரத்தத்தில் இந்த உப்புகளின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்தம் பாதிப்புகளை குறைகிறது. அத்திகாயிலிருந்து வரும் பாலை வாய்ப்புண் இருப்பவர்கள் தடவினால் வாய்ப்புண் குணமாகும்.

உடல் பலம் பெற நினைப்பவர்கள் தினமும் இரவில் பசும்பாலில் சில காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து காலையில் அப்பழங்களை சாப்பிட்டு அப்பாலை அருந்தினால் உடல் பலம் பெற தொடங்கும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகளும் நீங்கும்.

அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்த பின்பு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.

வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் அத்திப்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே அத்திப்பழங்களை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.

தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

கிரேக்கர்கள் அத்திப் பழத்தை இயற்கையான முறையில் பாலுணர்வு தூண்டும் பொருளாக பயன்படுத்தினார்கள்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தக்கசிவு குறையும். தலைமுடி உதிரும் பிரச்னைகள் இருப்பவர்கள் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது நின்று முடியின் வேர்கள் பலமடையும்.

அத்திப் பழம் குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்தியின் இலைகளை இடித்து பவுடராக்கி தேனுடன் கலந்து உண்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது அவ்விடத்திற்கு இவைகளை வைத்துக் கட்டினால் இரத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் மூலம் வாய் கொப்பளிக்கலாம். அத்தி மரத்தின் பட்டையை இரவில் தண்ணீரில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டுவலிகள் குணப்படும்.
நீரழிவு குணமாகும். அத்தி மரத்தை லேசாக கீறினால் ஒரு வித பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத்தின் பாலாகும். இந்தப் பாலை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories