
அத்திப்பழ ஜூஸ்
தேவையான பொருட்கள் :
அத்திப்பழம் – கால் கிலோ
பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
இஞ்சி – 1 துண்டு
தேன் – 1 டீஸ்பூன்
பால் – 1 கப்
செய்முறை :
5-6 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து ஜூஸ் செய்யலாம் .
அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
பழங்களின் தண்டுகளை நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும்.
சிறிய அளவில் அவற்றை நறுக்கி, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
அதிலிருந்து ஜூஸ் தயாரிக்க பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த ஜூஸை ஒரு தம்ளரில் ஊற்றி பருகலாம்.
சூப்பரான சத்தான அத்திப்பழ ஜூஸ் ரெடி.