
அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் தங்கள் அம்மாக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.
என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே.. நானாகிய நதி மூலமே.. தாயாகிய ஆதாரமே” என கவித்துவமாக பதிவிட்டு தனது அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை பதிவிட்டு அன்னையர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகரான பிருத்விராஜ் தனது அம்மா தன்னை கட்டிப்பிடித்து இருக்கும் சூப்பரான புகைப்படத்தை பதிவிட்டு, ஹேப்பி மதர்ஸ் டே என்றும், தனியாக அம்மா என்னும் மந்திரச் சொல்லை பதிவிட்டும் ட்வீட் போட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தங்கள் பிள்ளைகளை மட்டுமின்றி அனைத்து பிள்ளைகளையும் தன் சொந்த குழந்தையாகவே பார்க்கும் அனைத்து அம்மாக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ள நடிகை வனிதா விஜயகுமார். தனது அம்மா மஞ்சுளாவில் புகைப்படத்தை பதிவிட்டு அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் தனது அம்மாவுடன் சிறு பிள்ளையாக இருந்த போது எடுத்துக் கொண்ட அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் அனைத்து அன்னையருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள் என பிக் பாஸ் அர்ச்சனா வாழ்த்தி உள்ளார். அம்மா நிர்மலா, மற்றும் கருவை சுமந்து நிற்கும் தங்கை அனிதா மற்றும் எங்க எல்லாருக்கும் அம்மாவாக இருக்கும் சாரா என தனது மகளையும் வணங்கி வாழ்த்தும் அற்புத பதிவை போட்டுள்ளார்.

என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






