விஸ்வாமித்திரர் சொன்ன கந்தன் பெருமை!
ராமாயணத்தில் ஒரு சம்பவம், அதாவது, ராமபிரானுக்கு கந்தப் பெருமானின் சரிதத்தை விவரித்த விஸ்வாமித்திரர், கந்தனின் கதையைப் படிப்பவருக்குக் கிடைக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார். அவர் சொன்ன பலஸ்ருதி ஸ்லோகம்:
இமம் ச்ருணுயாத் ராம
கார்த்திகேயஸ்ய ஸம்பவம்
ஸர்வ பாப விநிர் முக்தோ
யாதிப்ரஹ்ம ஸநாதநம்
பக்தச்சய: கார்த்திகேயே காகுத்ஸ்த
புவிமானவ ஆயுஷ்மாந்
புத்ர பௌத்ரைச்ச
ஸ்கந்த ஸாலோலையம் ஆப்நுயாத்!
கருத்து: ராமா! கார்த்திகேயனுடைய இந்தச் சரிதத்தை யார் அறிகின்றாரோ, அவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு, நிரந்தரமானப் பேரின்பத்தை அடைகிறார். காகுஸ்தா! உலகில் கார்த்திகேயனிடத்தில் பக்தியுடைய மனிதன் எவனோ அவன், புத்திரன் மற்றும் பேரன்மாருடன் நீண்ட ஆயுளை உடையவனாக வாழ்ந்து, நிறைவில் ஸ்கந்த லோகத்தில் இருக்கும் பேற்றினை அடைவான்.