dmk velusamy
dmk velusamy

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் தலையீட்டால் ஊராட்சி மன்ற தலைவர் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குழி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக பிரியா செயல்பட்டு வருகிறார்.

துணைத் தலைவராக மகேஸ்வரி இருந்து வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர் வேலுச்சாமி ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு துணைத்தலைவர் மகேஸ்வரியை வேலை செய்ய விடாமல் அவரது கணவர் வேலுச்சாமி வேலை செய்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொழுமங்குழி பஞ்சாயத்து தலைவர் பிரியா மற்றும் வார்டு உறுப்பினர்கள் துணைத் தலைவரின் கணவர் தலையீட்டை தடுக்க வேண்டுமென இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு அளித்ததாக கூறப்படுகிறது.

Maheswari
Maheswari

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி துணைத் தலைவரின் கணவர் வேலுச்சாமி தலையீடு இல்லாமல் இதுவரை இருந்து வந்தது. இவர் திமுக சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு துணைத்தலைவர் மகேஸ்வரியின் கணவர் வேலுச்சாமி கொழுமங்குழி ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது

இந்த ஆடியோவில் துணைத் தலைவரின் கணவர் வேலுச்சாமி தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் பணியாளர்கள் கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் தங்களது வீடுகளுக்கு வந்து கையெழுத்து வாங்க வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு கொழுமங்குழி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரியா என்பவரை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending