கொரோனா: அஜித் பட இயக்குநரின் தாய் மறைவு!

Published:

jerry
jerry

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஜெர்ரியின் தாயார் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் ஜே.டி – ஜெர்ரி இணைந்து திரைப்படங்கள், விளம்பர படங்களை இயக்கி வருகின்றனர். இருவரும் ஒன்றாக பல படங்களுக்கு கதை எழுதியுள்ளனர். இவர்கள் முதலில் இயக்கிய திரைப்படம் உல்லாசம். அஜித், விக்ரம் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதே போல் 2003இல் வெளிவந்த விசில் படத்தை இயக்கியவர்களும் இவர்கள்தான்.

தற்போது லெஜென்ட் சரவணனை வைத்து திரைப்படம் இயக்கி வருகின்றனர். இவர்களில் இயக்குநர் ஜெர்ரியின் தாயார் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

susaiammal
susaiammal

கொடைக்கானலில் வசித்து வந்த இயக்குநர் ஜெர்ரியின் தாயார் சூசையம்மாள் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img