நடிகையின் வீட்டில் நுழைந்து நபர்! செய்த செயலால் அதிர்ச்சி!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
sonali
sonali

கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் என திரைப்பிரபலங்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனால் பிரபல நடிகை வீட்டில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் வசித்து வரும் பிரபல மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென கையில் கத்தி மற்றும் பொம்மை துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அவரை பிடிக்க நடிகையின் அப்பா முயற்சி செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் பின்னர் அந்நபரை மடக்கி பிடித்தனர்.

அந்த நபரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் நடிகையின் தீவர ரசிகராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனினும் வீட்டிற்குள் ஆயுதத்துடன் புகுந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!
sonali kulkarni
sonali kulkarni

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்த நபர் அபார்ட்மெண்டின் மாடிக்கு சென்றிருக்கிறார். வீட்டின் பணியாளர் அந்த நபரை பார்த்துவிட்ட நிலையில் தன்னை போலீஸ் தேடுகிறது அதனால் ஒளிந்துகொள்ள இடம் வேண்டும் என தெரிவித்தாராம்.

அதன் பின் அவரை பிடிக்க நடிகையின் அப்பா முயற்சி செய்திருக்கிறார், ஆனால் அந்த நபர் தப்பி சென்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் வேகமாக சுற்றிவளைத்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.