
பெண் ஒருவர் காருக்குள் இருந்து அழுது கொண்டே தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத்தின் அகமதாபாத்தில் ரஞ்சித் என்ற இளைஞர் , சமூக ஊடகத்தில் நிதி என்ற பெண் ஒருவரிடம் நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் நிதி கணவர் ரஞ்சித்திடம் கோபித்துக்கொண்டு அதே ஊரில் இருக்கும் தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்று விட்டார் .
ரஞ்சித் தன்னுடைய நண்பர் ஒருவரின் காரில் கடந்த வாரம் மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு சமாதானம் பேசி அவரை காரில் கூட்டி வந்த போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் சண்டை முற்றியதில் ரஞ்சித் அந்த காருக்குள் வைத்து மனைவியின் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தி கொல்ல முயன்றுள்ளார். அதனால் பயந்து போன அந்த பெண் அந்த காரிலிருந்து வெளியே குதித்து தப்பியோடி அங்குள்ள காவல் நிலையத்தில் கணவர் ரஞ்சித் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.